Monday, March 3, 2008

தா(வரம்) ஒன்று பயன்கள் பல.

வெட்டி வேரின் பயன்கள்
1. மண் அரிப்பைத் தடுக்கிறது.
2. மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.
3. நிலத்தடி நீர் உயர உதவுகிறது.
4. மண் வளம் பாதுகாக்கிறது.
5. இலை மூட்டாக்கு இட பயன்படுகிறது
6. கால்நடை தீவனமாகப் பயன்படுகிறது.
7. பூச்சி , களை நிர்வாகத்தில் பயன்படுகிறது.
8. காளான் வளர்ப்பில் பயன்படுகிறது.
9. எண்ணை எடுக்கப்பயன்படுகிறது.
10. கைவினைப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.
11. உயர்அழுத்தப் பலகை செய்யலாம்.
12. எரிபொருளாக பயன்படுகிறது.
13. கரிமம் நிலைப்படுத்துவதில் பயன்படுகிறது.
14. கழிவு நீரை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.
15. நிலத்தை (Landscape) அழகு படுத்த உதவுகிறது.
16. கூரை வேயப்பயன்படுகிறது.
17. சாலை மற்றும் இரயில் பாதை பராமரிப்பில் உதவுகிறது.
18. ஏரி மற்றும் குளக்கரைகளை ஸ்திரப்படுத்துகிறது.
19. ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
20. பாலை வனங்களில் மேலும் மணல் பரவாமல் தடுக்கிறது.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா என்ன அழகு !!! பார்டர் கட்டினாற்போல.. :)

Iyappan Krishnan said...

உபயோகமான தகவல்கள். நன்றி

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

Jeeves

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

வலைச் சரத்தில் சஞ்சய் சுட்டிய வழியில் வந்த எனக்கு வெட்டி வேரின் இத்தனை பயன்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. கை வினைப் பொருட்களின் படங்களுடனான பதிவுகளும் அருமை.

வெயில் காலங்களில் அக்காலத்தில் வாசனைக்காகவும் (மருத்துவ குணத்துக்காக?வும்) வெட்டிவேரை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி மண்பானையில் போட்டு வைத்திருப்பார்கள். இதைத் தாண்டி வேறெதுவும் தெரியாத எனக்கு பல தகவல்களைத் தந்தது உங்கள் வலைப் பூ. நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நாம் வெட்டி வேரின் முழுப்பயனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை. மேலும் அறிய http://www.vetiver.org/ ஐப் பாருங்கள்.