Saturday, January 31, 2009

ஈரியோபைட் தாக்கிய தென்னங்காய்களை எளிதாக வெட்டும் கருவி..

பொதுவாக ஈரியோபைட் (Eriophyte mite )தாக்கிய தென்னங்காய்களில் மட்டை எடுப்பதென்பது சற்று கடினமே. எனவே மட்டை எடுப்பவர்கள் இதனை தவிர்க்க முயல்வர் அல்லது அதிக கூலி கேட்பார்கள் இல்லையேல் யாருக்கும் உதவாமல் வீணாகும். விவசாயிகளுக்கு இதில் மேலும் நஷ்டம். நல்ல காய்களை மட்டை எடுக்க ஒரு காய்க்கு 40 பைசா வரை செலவு ஆகின்றது. அவ்வாறு அதிக கூலியின்றி 1 மணி நேரத்தில் இரு நபர்கள் சுமார் 500 - 600 காய்களை 10 பைசா (ஒரு காய்க்கு) செலவில் மிக எளிதாக (சிறுவர்,பெண்கள் கூட இயக்கலாம் என்பது இதன் சிறப்பு) வெட்டும் கருவியொன்றை கண்டுபிடித்து உபயோகித்து சாதனை செய்து கொண்டிருப்பவர் திரு.சுப்பையன்.
இவரது பதப்படுத்தப்பட்ட குதிரைமசால் என்ற தீவனம் சென்னை,பெங்களூரூ, புனே,கொடைக்கானல் மற்றும் உதகை,குன்னூர் போன்ற நகரங்களில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு உணவாக விரும்பி வாங்கப்படுகிறது. வேலையின் மதிப்பை உணர்ந்த இவரிடம் வேலை செய்யும் மணியளவைப் பொறுத்து வேலையாட்கள் கூலி பெறலாம் என்பது ஆச்சரியமான நடைமுறை உண்மை. மிகத் துல்லியமாக பயிர்களின் வரவு செலவுகளை கணக்கிடும் இவரிடம் நாம் மனித வள நிர்வாகம், நிதி நிர்வாகம், சந்தை நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கருவிகள் கண்டுபிடிப்பு என நிறைய தெரிந்து கொள்ளலாம்.

தொடர்பிற்கு :-
திரு.R. சுப்பையன்
கணக்கன் தோட்டம்
அத்தப்பகவுண்டன் புதூர் (அஞ்சல்)
இருகூர் (வழி)
கோவை.

தொலைபேசி : 0422-2627072
அலைபேசி : 93600 27072

Saturday, January 24, 2009

மாண்பு மிகு மண்புழுக்கள்.

இறைவன் கொடுத்த உதவியாளர்களில் மண்புழு மிக சிறந்த உதவியாளர். மண்ணை உழுவதிலிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்து நல்ல உரமாக மாற்றி விவசாயிகளின் நண்பன் என்று பெயரெடுத்த இவரை இரசாயன உரம், பூச்சி மற்றும் களை மருந்துகளால் மண்ணை விட்டே விரட்டிவிட்டோம். விவசாயம் மூச்சு திணறிய போது திடீர் ஞானோதயம் உடனே அதற்கென கட்டிடம் கட்டி வளர்த்தால் உரம் கிடைக்கும் அதுதான் நல்லது என ஒருவர், இல்லை விவசாய நிலத்திலேயே வளர்த்தால் நல்லது என மற்றொருவர். ஆப்ரிக்க இனம் தான் சிறந்தது என ஒருவர், இல்லை பெரும்தீனீ தின்னும் அது ஒரு --- என மற்றொருவர். நிறைய இடங்களில் இந்த சர்சையை காணும் எனக்கு வியப்பாக இருக்கும். இறைவன் படைத்த எல்லாமே ஏதோ ஒரு நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் நமக்கு சாதகமானதை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவைகளை அழிக்கிறோம் முடியாவிட்டால் தூற்றுகிறோம். ஒவ்வொரு தொழிலுக்கும் வல்லுனர்களை (Specialist) தேடும் நாம் மண்புழுக்களுக்கு மட்டும் சர்சையிடுகிறோம். இதனால் விவசாயிகள் குழப்பம் அடைகின்றனர் என்பதே உண்மை. விவசாயநிலங்களில் நாட்டுபுழுக்களையும், விவசாய கழிவுகளை விரைவாக மறுசுழற்சி செய்யவும், நகரகழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஆப்ரிக்க இன மண் புழுக்களையும் உபயோகிப்பதில் தவறில்லை என எண்ணுகிறேன். இல்லையேல் அதுவே (குப்பைகள்) சுற்றுசுழலுக்கு மாசுபாடுள்ளதாக மாறிவிடக்கூடாது. சென்ற வருடம் எர்ணாகுளம் நகரில் அரசு விடுமுறை அறிவித்து நகர குப்பைகளை அகற்றியதை மறந்துவிடாதீர்கள். மக்கள் தொகை பெருக்கத்தில் குப்பைகள் மலையளவு விரைவில் சேர்ந்துவிடுகிறது. தீர்வு??? மாண்பு மிகு மண்புழுக்கள்தான். கோவையில் நகர கழிவுகளை மண்புழுக்கள் கொண்டு வியாபார ரீதியில் மண்புழு உரம் தயாரிக்கிறார்கள். சுமார் 1 அடிக்கு மேலுள்ள மண்புழுக்கள்.

Monday, January 19, 2009

அதிர வைத்த ஒரு அழகு செடியின் விலை

அழகு செடிகள் வளர்ப்பவர்களின் உலகம் சற்று அலாதியானது. உலகமயம், தாராள மயத்திற்கு பின் எல்லாமே இறக்குமதியானது. அழகு செடிகளும் வர துவங்கி சில ஆண்டுகள் ஆகின்றது. இந்த வளர்ப்பவர்களின் உலகம் பணத்தை மதிப்பிடுவதில்லை Owner’s Pride என்ற எண்ணத்தில் மிக பாதுகாப்பாக வளர்ப்பார்கள். என்ன விலை கொடுத்தும் வாங்குவார்கள். அவ்வாறு நான் பார்த்த அஃகுளோனிமா (Aglonema) என்ற செடியின் (சிறியது )விலை ரூ.5000/= நம்புங்கள்

ஆர்கிட் மலர்கள்- புகைப்படம்

வண்ணங்களிலும், வடிவத்திலும்,அழகிலும் ஆர்கிட் மலர்களுக்கு நிகர் ஆர்கிட் மலர்கள் தான் (புகைபடங்களை பார்த்த பின் சரி என சொல்வீர்கள்? ). நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதால் கொய்மலர் (Cut Flower) வணிகத்தில் இன்று சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாக தென்கிழக்கு ஆசியநாடுகளில் வகை வகையான ஆர்கிட் மலர்களை காணலாம். குறிப்பாக தாய்லாந்து நாடு மலர்கள் சிறப்பானவை. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் இம்மலர்களுக்கு பெயர் பெற்றவை. இருநாட்களுக்கு முன் கோட்டயம் தோட்டக்கலை கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தார்கள். விலையும் எட்டாத உயரத்திலிருந்தது. காட்சிக்கு சில.



Thursday, January 15, 2009

தேனீ வளர்ப்பில்.........ஆரம்பப் பாடம்.

ச்சம் தவிர்.
ர்வம் காட்டு.

டமறிந்து துவங்கு.
யைப் பேணு.

ணவு ஊட்டு.
க்கம் காட்டு.

றும்பை விரட்டு.
ற்றமுற உதவு.

யம் அகற்று.

ன்று சேர்.
டாது தடு.

ஷதம் கொடு.

பயிற்சிக்கூடம் ஒன்றில் பார்த்து.

Wednesday, January 14, 2009

தேனீ வளர்ப்பு நுட்பங்கள்- நூல்

மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் மிக அதிக மகசூல் தரும் புதிய இரகங்களை கண்டுபிடித்தாலும் இயற்கையாக தேனீக்கள் செய்யும் மகசூல் அதிகரிப்பை தவிர்க்கக் கூடாது. தேனீ வளர்ப்பது என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகும். விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு சாலப் பொருந்தும். ஒன்று மகசூல் கூடுகிறது மற்றொன்று தேன், மெழுகு, அரசக்கூழ் (Royal Jelly) போன்றவற்றால் கூடுதல் வருமானம்.
1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் “தேனீ வளர்ப்பு நுட்பங்கள்” என்ற நூல் மிக பயனுள்ளதாக இருக்கும். தெளிவான வண்ணபடங்களுடன் வளர்ப்பு, பராமரிப்பு நுட்பங்கள், உணவு ஊட்டுதல், நோய்கள் என அனைத்து தகவல்களையும் விரிவாக தந்திருப்பது நூலின் சிறப்பு. ரூ.100/= விலையுள்ள இந்நூல் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.

வேளாண் பூச்சியியல் துறை,
பயிர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் - 641 003.

Tuesday, January 13, 2009

பொங்கல் நல்வாழ்த்துகள்.


தேனீக்களின் நடனம் - வீடியோ காட்சி.

பூச்சியினத்தில் தேனீக்கள் வித்தியாசமான பூச்சியானமாகும். கூட்டமாக வாழும் அவை மிக தெளிவான வாழ்கை முறையோடு உழைப்பிற்கு பெயர் பெற்றவை. கூர்ந்து நோக்கினால் அதன் வாழ்கை முறை நம்மை பிரமிக்க வைக்கும். அதில் ஒன்று நடனம். புதிதாக உணவின் இருப்பிடத்தை அறிந்த தேனீ மற்ற தேனீக்களுக்கு சூரியனை மையப்படுத்தி உணவு இருக்கும் இடத்தை மிக மிக துல்லியமாக அதன் தூரம், திசை போன்றவற்றை அறிவிக்க நடனம் ஆடும். இதனை waggle dance என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதிபுத்திசாலிகளான இந்த மிக சிறிய பூச்சியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

அவ்வாறு ஆடும் 1 நிமிட வீடியோ படத்தை காண கீழேயுள்ள தொடர்பை உபயோகியுங்கள். கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=-7ijI-g4jHg

மற்றொரு வீடியோ காட்சி.

Tuesday, January 6, 2009

இப்படியும் வளரும் மரங்கள்.

நண்பர் ஒருவர் மரம் பற்றிய சில புகைபடங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். வித்தியாசமாக வளரும் அவைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.