Tuesday, June 2, 2009

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Home)

பிரபல பிரான்சு நாட்டு புகைபட நிபுணர் யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் Home என்ற வானிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிகழ்வுகள் பற்றிய படம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்று எண்ணுகிறேன். பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக சுற்றுச்சுழல் தினத்தன்று ( 5 ஜுன் 2009 ) முறையாக வெளியிடப்படுகிறது. திரு.அல் கோர் அவர்களின் An Inconvenient Truth படத்திற்கு பின் உலகமெங்கும் மக்களின் மனதில் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை இப்பூவுலகிற்கு தரும் என்று நம்புகிறேன்.

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் (United Nations Environment Program(UNEP) Goodwill Ambassador ) தனது சுற்றுச்சுழல் பற்றிய முனைப்பிற்காகவும், பணிக்காகவும் “எர்த் சாம்பியன் ” ( Earth Champion ) என்ற பட்டத்தை பெற்றவர்.

இப்படம் உலகின் எல்லா பகுதிகளிலும் திரையிடப்பட்டு சுற்றுச்சுழல் பற்றிய திருப்புமுனை படமாக வரலாற்றில் இடம் பெற இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

2 comments:

Ramasamy, Oddanchathram said...

I am a retired Botany Lecturer and came to your site by your advt in Vivasayi Ulakam Magazine. Really a very good and noble project to educate our farmers on subjects like Ecology and Conservation through your writing, that too in our mother tongue. My hats off to you Vincent. On seeing your efforts I am a hopefull person now.

வின்சென்ட். said...

ஐயா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்களின் தேர்ந்த ஞானமும், அனுபவமும் நம் உழவர் பெருமக்களுக்கு தேவை. எனவே வலைப்பூ ஓன்று ஆரம்பித்து பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.