Monday, August 16, 2010

தொட்டிகளில் எளிதாக செடிகள் வளர்க்க சில யுக்திகள்.

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுறுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் படங்களில் காட்டியவாறு தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

மட்டையை நிரப்புங்கள்
மூடியில் துவாரம் செய்யுங்கள்
மூடியை கீழாக மட்டையின் அருகில் வையுங்கள்
மண் இட்டு நிரப்புங்கள்
செடியை நடுங்கள்
நீரை ஊற்றுங்கள்.

18 comments:

Unknown said...

மிக உபயோகமான தகவல் .. இன்றைக்கே வீட்டு தொட்டிகளை மாற்றிவிடுகிறேன் ...

Anonymous said...

நல்ல செய்முறை விளக்கம். நன்றி அய்யா.

இளங்கோ said...

பயனுள்ள பதிவு.. நன்றி

வின்சென்ட். said...

திரு. கே.ஆர்.பி.செந்தில்
திரு. பாரதி
திரு. இளங்கோ

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.உண்மையில் இதனை பதிவிட சற்று தயக்கமாக இருந்தது. தகவல் உபயோகமாக உள்ளது என்பதை அறியும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது.

kumar v said...

Dear Vicent Sir,

Very useful and step by step illustration.Sorry for typing in English , for the next comment I'll type in Tamil.

Thank you.

Thanks,
Kumar

Adiya said...

hi,
I am your regular reader and having liked minded interest like you.

To add on your post here are few additional articles related to that.

http://www.insideurbangreen.org/sub-irrigated-grow-box/

few sample YouTube videos.
http://www.youtube.com/results?search_query=self+watering+container&aq=0

வின்சென்ட். said...

திரு. குமார்

உங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் கருத்துக்கள் தமிழில் வர வாழ்த்துக்கள். நான் தமிழில் எழுத விருப்ப ஓய்வுக்குப் பின் பழகினேன். அதேபோன்று பதிவுகளில் புகைபடம் அதிகம் தெளிவைத் தரும் என்று அதனையும் பழகினேன். முயற்சி திருவினையாக்கும்.

வின்சென்ட். said...

Sri. Adiya

Thank you very much for your Visit and giving me some excellent links.

தமிழ் யாளி said...

வெரும் தண்ணிபாட்டிலில் செடி வளர்த்தேன் சூடு தாங்காமல் விரைவில் இறந்துவிட்டது
உங்கள் யுக்தி பயணளிக்கும் என நம்புகிறேன்

வின்சென்ட். said...

திரு.தமிழ் யாளி

உங்கள் வருகைக்கு நன்றி.கீழ்கண்ட தொடர்பைப் பாருங்கள்.அனுபவத்தின் அடிப்படியில் பதிவிடுவதால் நிச்சயம் பயனளிக்கும்.

http://maravalam.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

மூலிகைவளம் said...

உங்கள் தந்தையின் அந்தக்கால கண்டுபிடிப்புகள் மரங்களுக்குப் பதிலாக பூந்தொட்டிக்கு கூட பயன் படுத்தி விட்டீர்கள் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

வின்சென்ட். said...

சார்,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொட்டிக்கும் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது செய்துவிட்டேன்.

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு.
அமெரிக்காவில் பிரபலமாகி வரும் "தக்காளியை தலைகீழாக வளர்க்கும்" விதம் பற்றி பதிவிட்டுள்ளேன். இந்தியாவில் இதை உபயோகபடுத்தி பயனிருந்தால் , அது பற்றி நீங்கள் பதிவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்

http://marutam.blogspot.com/2010/08/blog-post.html

வின்சென்ட். said...

திரு.சதுக்க பூதம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் உற்சாகம் தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சில எளிய ஆனால் பயனுள்ள முயற்சிகளை செய்து வருகிறேன். நிச்சயம் பலருக்கும் உபயோகமாக இருக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

சதுக்க பூதம் said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் நான். மிக நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

அமெரிக்காவில் பீட் மனல் அல்லது வேறு சில மூல பொருட்களை நன்கு அழுத்தி கேரம் போர்டு காயின் அளவிற்கு செய்து அதை ஒரு பெட்டியில் வைத்து விற்கிறார்கள். அதை தண்ணீரில் ஊற வைத்தால் மிக பெரிதாக உப்பி விடுகிறது. அதில் விதை போட்டு வளர்த்தால் அது நன்கு வளர்கிறது. அதை பிறகு டிரான்ஸ்பிளாண்ட் செய்து விடலாம். அதை கூட இந்தியாவில் தேங்காய் நார் கழிவு மற்றும் பகாசி வைத்து தயாரிக்கலாம் என்று தோன்றுகிறது. அது பற்றிகூட புகை படத்துடன் விரிவாக பதிவிடுகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

வின்சென்ட். said...

திரு.சதுக்க பூதம்
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. உங்கள் அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

ezhil said...

hello brother u r doing great job in net 2 great and i would like 2 share something 2 u.i m very intresting in nature works plz see i m a volunteer in here www.ishayogagreenhandsmannargudi.blogspot.com
i need some help from u plz add my id in face book thak u.

வின்சென்ட். said...

Thank you Mr. Rajesh. You can contact me at any time.