Monday, August 23, 2010

மாடியில் கீரை வளர்ப்பு - ஓர் பார்வை

மாடியில் கீரை வளர்ப்பு பற்றி ஏற்கனவே பதிவு ஒன்றை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இரண்டாம் முறை செய்த போது இடுபொருள் முதல் அறுவடை வரை ஆவணப்படுத்தினேன். தென்னை மட்டை, உலர்ந்த சிறிய வேப்பமர துண்டுகள் என எளிதாக கிடைக்கும் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. மண்புழு படுகையாகவும் உபயோகமாகிறது.




பொழுது போக்கிற்காக இன்றி பார்த்த பின் ஆர்வலர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 23 நாட்களில் முதல் அறுவடை. சுத்தமான சத்தான கீரை சமையலுக்கு தயார். வரும் ஒரிரு மாதங்களுக்கு “நிலைய வித்துவானாக” உதவி புரியும். முயற்சி செய்யுங்கள் ஆரோக்கிய உணவை சுவைக்கலாம்.

பழைய பதிவைக் காண :
http://maravalam.blogspot.com/2010/05/blog-post.html

15 comments:

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள இடுகை. எங்க வீட்டுல சின்னத்தொட்டிகள்ல வளர்த்துருக்கேன்.

வின்சென்ட். said...

திரு.அமைதிச்சாரல்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல பதிவு அய்யா. நெருக்கடியில் வாழும் நகர்ப்புர மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நன்றி.

yasaru said...

நான் உங்க விசிறி ஆயிட்டேன்..உங்க வலைப்பூ அருமை.ரொம்ப பயனுள்ளது

வின்சென்ட். said...

திரு.பாண்டியன்
திரு.யாசர்

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

Kousalya Raj said...

good one. very useful one to all.

வின்சென்ட். said...

Mrs. Kousalya

Thank you very for your visit and comments

cheena (சீனா) said...

அன்பின் வின்செண்ட்

நல்ல தொரு இடுகை - நற்சிந்தனையில் விளைந்தது. பகிர்வினிற்கு நன்றி.

முயலலாம்

நல்வாழ்த்துகள் வின்செண்ட்
நட்புடன் சீனா

வின்சென்ட். said...

திரு.cheena (சீனா)

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Vetirmagal said...

உங்கள் இடுகைகளை படித்து கற்றுக்கொண்டது ஏராளம்.

கோகோ பீட் போட்டாலும் பரவாயில்லையா? இந்த தென்னை மட்டை பயன்படுத்தினால் பல வகை உரங்கள் இட வேண்டி இருக்குமே.
சில குறிப்புகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திருமதி. வெற்றிமகள்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

"கோகோ பீட் போட்டாலும் பரவாயில்லையா? "

தவறில்லை. ஆனால் அதன் Ec அளவு 1 (ஒன்றுக்கு ) கீழாக இருக்கவேண்டும். நீங்கள் எதனை உபயோகித்தாலும். மண்புழு உரம்,உயிர் உரங்கள் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

SREEKANTH said...

manpuzhu urapadugai engellam kidaikkum sir.

வின்சென்ட். said...

திரு/திருமதி ஸ்ரீ

கோவை, சேலம் போன்ற நகரங்களில் கிடைக்கிறது.

Janar said...

Ec அளவு enraal enna nanbaree..

வின்சென்ட். said...

Electrical conductivity (EC) is the most common measure of soil salinity and is indicative of the ability of an aqueous solution to carry an electric current. Plants are detrimentally affected, both physically and chemically, by excess salts in some soils and by high levels of exchangeable sodium in others.