Thursday, January 20, 2011

காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் வணிகம்

உலக மயம், தாராளமயம், தனியார் மயம்  என்ற திசையில் உலக வணிகம் பயணிக்க ஆரம்பித்தவுடன் காப்புரிமை (Patent ), அறிவுசார்ந்த சொத்துரிமை (Intellectual Property Rights IPR ), பொருட்களுக்கான பூகோள பதிவுரிமை (Geographical Indications of Goods - GI) என பல உரிமைகளை தற்சமயம் பெற்றால்தான் வேளாண்மை வணிகம் செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் உரிமை கோரவில்லை என்றால் ஏதோ ஒரு நாட்டில் இதற்கு உரிமை கோரி பெற்றுவிடுகின்றனர் (உ.தா. மஞ்சள், பாசுமதி அரிசி, உரிமை மீட்டு எடுக்கப்பட்ட வேம்பு ). இதில் தனிநபர் இழப்புடன் நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் நமது பரம்பரை ஞானம், இடத்திற்கேற்ற பதிவுரிமை, மதிப்பூட்டும் தொழில்நுட்பம், கருவிகள் போன்றவற்றிற்கு காப்புரிமை உண்டு. ஆனால் வழிகாட்டுதல் இன்மை, அதிக பொருட்செலவு போன்ற காரணங்களால் பொதுவாக நாம் வேளாண்மை சார்ந்த உரிமைகளை பெறுவதில்லை.

இது பற்றிய வழிகாட்டுதலுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் ஒரு துறையை ஏப்ரல் 2010 இல் உருவாக்கி கீழ்கண்ட சேவைகள் தருகின்றனர். தொடர்பு கொண்டு பயன் பெறுவோம்.

காப்புரிமை பெற்றுத்தருதல் (Patent )

அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை வழங்குதல் (IPR)

பூகோள பதிவுரிமை பெற்றுத் தருதல் (GI)

ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி அளித்தல்

வேளாண் வணிகம் சார்ந்த ஆலோசனை வழங்குதல்

வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அறிவுரை வழங்குதல்

தொடர்புக்கு:-

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்,
கோயமுத்தூர் – 641 003
தொலைபேசி : 0422- 6611360

மேலும் இது பற்றி அறிந்துள்ள கொள்ள :-

http://indiapatents.blogspot.com

Monday, January 17, 2011

மாடித்தோட்டம் - ஒருநாள் பயிற்சி.

பொருளாதார சீர்திருத்தங்கள்?? சட்டங்கள், காலநிலையில் வேறுபாடு, இயற்கை சீற்றம், கொள்ளையடிக்கும் இடைத் தரகர்கள், சில்லறை வணிகத்தில் கூட நுழைந்து லாபம் தேடும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள், உரத் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்களால் சிறு ,குறு விவசாயம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. விளைவு சென்ற மாதம் வெங்காயம் ரூ.100/ =, முருங்கைக் காய்  ரூ.200/= என வாங்கினோம். வருங்காலத்தில் இது ஒரு தொடர் கதையாக மாறலாம். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது நகர மக்களே!! பாதிப்பை ஓரளவு குறைப்பதற்கு நகரங்களில் மாடித்தோட்டம் ஒரு மாற்றாக அமையும் இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


Friday, January 7, 2011

மண்புழு உரம் தயாரிப்பு – ஒரு நாள் பயிற்சி.


ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்கள். அது போன்று இந்த மண்புழு உரம் தயாரிப்பு என்பது மக்கக்கூடிய சுற்றுச் சுழல் மாசுபாட்டை உண்டாக்கும் நம் வீட்டுக் கழிவுகளை நம் இடத்திலேயே மண்புழுக்களின் உதவியால் சத்துள்ள உரமாக மாற்றுவது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை  நமது செடிகளுக்கே இட்டு இயற்கை காய்கறிகளை நாம் உற்பத்தி செய்யலாம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலும் வங்கிக் கடன் உதவியுடன் மேற் கொள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Tuesday, January 4, 2011

ஆனந்தவிகடன் வரவேற்பறையில் “மரவளம்”


ஆனந்தவிகடன் பத்திரிகையின் "வரவேற்பறையில்" மீண்டும் மரவளம் இடம் பிடித்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. சர்வதேச வன ஆண்டில் வனத்திற்காக தனது உயிரை ஈந்த திரு.சிகோமென்டிஸ் அவர்களின் தியாகம் மேலும் பல லட்சம் வாசகர்களை சென்றடையும் என்பதும் அழிக்கப்பட வேண்டிய களைகள் பற்றி மக்கள் அறிய இந்த அறிமுகம் தேவை என்பதில் ஐயமில்லை. இரண்டாம் முறையாக வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
 
சென்ற முறை வரவேற்பறையில் இடம் பெற்ற போது எனது பழைய பதிவு.

Saturday, January 1, 2011

சர்வ தேச வன ஆண்டு 2011


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.
உலக வனங்கள்
 இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்

தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.

இந்த புத்தாண்டில் நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் புத்தாண்டு ஆவல்.