Tuesday, December 31, 2013

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்.

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை  அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்)  மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.



இயற்கை வேளாண்மை, சூழல் பாதுகாப்பு,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், பசுமை புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு தளங்களில் விமர்சனங்களையும் அதேசமயம்  ஆக்கபூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்தவர். எளிய மக்களின் விடிவெள்ளி. இவ்வலைப் பூ ஐயாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மா சாந்தியடைய இறைவனையும் வேண்டிக் கொள்கிறது.

நன்றி :  Rajini Babu

Thursday, December 26, 2013

சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கு ஓர் இனிய தகவல்



சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்கள் தங்களின் காய்கறி தேவைகளை ஓரளவிற்கு தாங்களே உற்பத்தி செய்ய தேவையான பொருட்களை 50% மானிய விலையில் தர தமிழக அரசு முன் வந்துள்ளது. நீங்களே செய்து பாருங்கள்  Do it yourself என்ற பெயரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இத்திட்டம் 16 ச.மீ பரப்பளவில் செய்ய  பொருட்களை பயனாளிகளுக்கு அளிக்கவுள்ளனர். 

பொருட்களின் பட்டியல்

செயல்முறை விளக்கக் கையேட்டைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.




விண்ணப்பம் ஆன்லைனில் அனுப்ப கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.



தொடர்பிற்கு.....
 உங்களின் வீட்டுத் தோட்டம் சிறப்பாக அமைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

ஆதாரம் மற்றும் நன்றி : http://tnhorticulture.tn.gov.in/

Tuesday, November 12, 2013

கோவையில் வீட்டு/ மாடி தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கம்





தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்

Saturday, October 19, 2013

மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்.



 
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

 இன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. தானே புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு  திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.

மரத்தின் பெயர்கள்
  1. சவுக்கு
  2. தைல மரம்
  3. மலை வேம்பு
  4. பெருமரம்
  5. குமிழ் மரம்
  6. சுபாபுல்
  7. சிசு மரம்.
எந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு
1.      தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ
2.      இடி/ மின்னல்
3.      கலகம்
4.      சூறைக்காற்று, புயல், சுழற்காற்று
5.      தண்ணீரில் மூழ்குதல்
6.      வன விலங்குகளினால் சேதம்.
 
இன்சூரன்ஸ் செய்யும் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.
1.      நிலம் உழுதல்
2.      நாற்றுக்களின் மதிப்பு
3.      நீர் பாய்ச்சுதல்
4.      உரமிடுதல்
5.      களையெடுத்தல்
6.      மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்
7.      மற்ற தேவையான செலவுகள்

இன்சூரன்ஸ் கட்டணம்
ஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில்  குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும்  இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.

மேலும் விபரங்கள் பெற
அருகிலுள்ள
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்

அல்லது 

வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.

Source : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை

Monday, September 2, 2013

ஹூஜல்கல்சர் (Hugelkulture)



வேண்டாத பொருட்களின் மறுஉபயோகம், குப்பை என்று எண்ணும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் சக்தி வீட்டுத் தோட்டதிற்கு உண்டு. சில முறைகள் நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் வழக்கத்தில் உண்டு. அவைகளில் ஒன்று ஹூஜல்குல்சர்
வேண்டாத அட்டைகள்

மரக்குச்சிகள்

மண்புழு உரம் கலந்த தென்னைநார் கழிவு

புதினா நாற்றுக்கள்.

நன்கு வளர்நதுள்ள புதினா

ஆரோக்கியமான இலைகள்
 “ஹூஜல்குல்சர் (hugelkulture) என்ற வாயில் நுழையாத இந்த ஜெர்மன் வார்த்தைக்கு உயரமான மேட்டுப்பாத்தி என்று பொருள் கொள்ளலாம். சிறு வித்தியாசம் பாத்தியின் அடியில் பெரிய மரத்துண்டுகளை அடுக்கி அதற்கு மேல் மண் இட்டு செடிகளை நடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல மரதுண்டுகள் மக்கி உரமாக மாறும் அதே சமயம் மரதுண்டுகள் நீரையும் தன்னகத்தே உறிஞ்சிக் கொள்வதால் மேலேயுள்ள தாவரங்களுக்கு உரமும் நீரும் அடிக்கடி தரவேண்டிய அவசியம் குறைவு. வேர்களுக்கு தேவையான காற்றும், எளிதில் செல்ல மக்கிய மரத்துண்டுகளும் இருப்பதால் வேர்கள் நன்கு பரவி செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜெர்மனியிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக  வழக்கத்தில் உள்ளது.  எளிமையானதும் செலவு குறைந்த ஒரு முறையாகும். வேண்டாத அட்டைப் பெட்டிகள், மரத்துண்டுகள், காய்ந்த இலைக் குப்பைகள், என அனைத்தையும் உபயோகித்து சிறப்பான ஹூஜல்கல்சர் முறையை வீட்டுத் தோட்டத்தில் மிக எளிதாக கடைபிடிக்கலாம். பெரிய அளவில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிறிய தொட்டிகளில் கூட செய்யலாம்.

Sunday, August 25, 2013

இன்று உலக வீட்டுத் தோட்ட தினம். 25-08-2013



பெருகி வரும் ஜனதொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைக் கேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நாம்மாலான  ஒரு மிக சிறிய வாய்ப்பு இந்த வீட்டுத் தோட்டம்

உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் வீட்டுத் தோட்டம் என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.

எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:

http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html

Sunday, August 11, 2013

உத்தரகாண்ட் மாநில பேரிடரும், “சிப்கோ” இயக்கமும்


மர அழிப்பிற்கு முக்கிய காரணம்  "நகர சிந்தனை"
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் (Cloud burst) ஜுன் மாதம்  ஏற்பட்ட தொடர்  மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கேதார்நாத், பத்ரிநாத். ஹரித்வார், ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், என்று வெள்ள பிரளயம்  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலைகள் உடைப்பு, ஆறுகளில் பெருவெள்ளம், பல கட்டிங்கள் இடிந்தது, ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் என்பவை  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பதில் ஜயமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் எப்படி, எப்போது என்று கேட்பதை விட, ஏன் என்று சிந்தித்தால் பிரச்சனையை எதிர்காலத்திலாவது எளிதாக கையாள முடியும்என்பார்கள்

வரலாற்று சிறப்புமிக்க கேதார்நாத் கோவில்
 வெள்ளப் பெருக்கில் ரிஷிகேஷ் சிவன் சிலை
இந்த பேரிடர் ( Disaster) ஏன்? என்ற கேள்வி விர்க்க முடியாததாக உள்ளது.  40 ஆண்டுகளுக்கு முன்பே சிப்கோ இயக்கம் தனது தொடர் போராட்டத்தால் இந்த பேரழிவை தடுக்க பல்வேறு இன்னல்களுக்கிடையே எடுத்த  முயற்சிதான் இந்த அளவிற்காவது குறைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. சிப்கோ இயக்கம் அதிகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு

சிப்கோ இயக்கம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது 
மக்களின்  பங்களிப்பு  இயக்கத்தின் வெற்றி.
இந்த புண்ணிய பூமியை வரும் தலைமுறையினரும் வணங்கவும், பாதுகாக்கவும்  வேண்டுமானால் மரம் வெட்டுதலை தவிர்த்தல்,  மரம் வளர்ப்பு,    மலைகளை தாரை  வார்ப்பதை  தவிர்த்தல்  போன்றவை பயன் தரும்.

சிப்கோ இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

நிகமானந்தா கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்
http://www.maravalam.blogspot.in/2013/03/blog-post_22.html


Tuesday, August 6, 2013

ஹிரோஷிமா நினைவு தினம்.


ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 68 வது நினைவு தினம். அன்று மறைந்த அப்பாவி மக்களுக்கும், அதன் தொடர்ச்சியாக இன்றும் உடல், உள ரீதியாக கஷ்டப்படும் அப்பாவி மக்களுக்கும் இந்த வலைப் பூவின் ஆழ்ந்த அஞ்சலி. 


Sunday, July 7, 2013

அக்ரி இன்டெக்ஸ் 2013




ஆண்டுதோறும் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடம் 11-07-2013 வியாழன் முதல் 14-07-2013 ஞாயிறு வரை கொடீசியா வளாகம் கோவையில் நடைபெறவுள்ளது.

நுழைவுக் கட்டணம்   :  ரூ.30.00 

Wednesday, June 26, 2013

“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்



தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.   

சில  நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு

சேலம் மூக்கனேரி
மண்திட்டுக்ககளில் மரங்கள்


சேலம் மூக்கனேரி தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.

குளம் காப்போம் குலம் காப்போம்

மண் திட்டுக்கள் உருவாக்கம்
கோவை மாநகரில் பெரியகுளத்தில் குளம் காப்போம் குலம் காப்போம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு வாருங்கள் காடு வளர்ப்போம் நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.



சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.



Photographs Source : Face Book & blogs

Friday, June 14, 2013

வீட்டுத் தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கு - பெண்களுக்கு மட்டும்




Source  : Pasumai Vikatan

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் விலாசம்


தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த நிலையில் கீழ்கண்ட பண்ணைகளின் விலாசம் எல்லோருக்கும் உதவியாக இருக்கமென எண்ணுகிறேன்.

தமிழகத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பிச்சிவாக்கம் (கிராமம் மற்றும் தபால்)
திருவள்ளூர் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
18, அருள் நகர், மாதவரம் பால் பண்ணை ரோடு,
அம்பத்தூர் தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஆத்தூர் (கிராமம்) செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரோடு,
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேல்கதிப்பூர், முசரவாக்கம் ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மேலொட்டிவாக்கம் (கிராமம்)       
காஞ்சிபுரம் மாவட்டம்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விச்சத்தங்கள் (கிராமம்),
உத்திரமோரூர் ரோடு,
 காஞ்சிபுரம் மாவட்டம்.

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கடப்பட்டு (கிராமம்), திருப்பத்தூர்  (தாலுக்கா) வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நவலோக் (கிராமம்) வலஜா (தாலுக்கா)
வேலூர் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, தகரக்குப்பம் (கிராமம்),
ஜவ்வாது மலை, திருவண்ணாமலை மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, திம்மபுரம், காவேரிப்பட்டணம் (கிராமம்) தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஜீனூர் (கிராமம்), செக்கரிமேடு, 
பெங்களூர் ரோடு,
தர்மபுரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, நெய்வேலி, சொரந்தூர் (கிராமம்), நெய்வேலி நகரம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,  சின்னக் கண்டியக்குப்பம் (கிராமம்), விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மருக்குலம் (கிராமம்),
திருச்சி கரூர் ரோடு, கரூர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குடுமியான்மலை, வயலொகம் (கிராமம்),
கும்பகோணம் ரோடு,   புதுக்கோட்டை மாவட்டம் 

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வல்லத்திரக்கோட்டை,
வம்பன் (கிராமம்),
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நாட்டுமங்கலம்,
அரந்தாங்கி,
பேராவூரணி ரோடு,
புதுக்கோட்டை மாவட்டம் 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
உதையாட்சி (கிராமம்),
தேவக்கோட்டை,
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,        
நேமம் (கிராமம்),
சிவகங்கை (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை, பெரியகுளம், புதுப்பட்டி (கிராமம்), எண்டப்பாதி கிராமம் அருகில்,  தேனி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பூவாணி (கிராமம்), வில்லிப்புத்தூர் அருகில், விருதுநகர் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெங்கடேஸ்வரன் (கிராமம்), மேல்த்தொட்டப்பட்டி கிராமம் அருகில் ‚
வில்லிப்புத்தூர்
விருதுநகர் மாவட்டம்
ப்ரயண்ட் பூங்கா, கொடைக்காணல்,
தென்மலை பகுதி,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தாண்டிக்குடி கிராமம்,
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
சிறுமலை (கிராமம்), தென்மலை பகுதி, 
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்காணிப்புக்கூடம், கொடைக்காணல்,
திண்டுக்கல் (மாவட்டம்)
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கொத்தப்பள்ளி (கிராமம்),
ரெட்டியார் சத்திரம்,   
திண்டுக்கல் மாவட்டம்             

        
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குண்டல் (கிராமம்), கன்னியாகுமரி, நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பேச்சிப்பாரை (கிராமம்), கன்னியாகுமரி (மாவட்டம்)

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
குற்றாலம்,
திருநெல்வேலி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,   
கம்பம் அருகில்,
பகடுப்பட்டு ரோடு,
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்
அரசு காய்கறி விதை உற்பத்தி மையம், கருமந்துரை,
ஆத்தூர் (தாலுக்கா),       
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
ஏற்காடு,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
முள்ளுவாடி,
புதுப்பேட்டை (வழி),
ஆத்தூர் (தாலுக்கா),
சேலம் மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
செம்மேடு (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பாசோலை (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
அறுநூற்றுமலை, சிறுமலை மலை,
சேலம் மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
மணியார்குண்டம் (கிராமம்),
நாமக்கல் மாவட்டம்.         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வீரபாண்டி (கிராமம்),
ஆணைக்கட்டி,
கோயமுத்தூர் (தாலுக்கா),
கோயமுத்தூர் மாவட்டம்         

அரசு தோட்டக்கலைப் பண்ணை,    
கல்லார் (கிராமம்)
மேட்டுப்பாளையம் ரோடு, கோயமுத்தூர்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
பர்லியார்,
மேட்டுப்பாளையம் சி.என்.ஆர் நீலகிரி மாவட்டம்
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
காட்டேரி, குன்னூர் - இராணிமேடு ரயில் நிலையம் அருகில்,
குன்னூர்,           
நீலகிரி மாவட்டம்

அரசு தோட்டக்கலைப் பண்ணை,
வெஸ்ட்வே,
குன்னூர்,
நீலகிரி - 643101



அரசு பழப்பயிர் மையம்,
வெட்வே ரயில் நிலையம், குன்னூர்,
நீலகிரி (மாவட்டம்)- 643101
             
சிம்ஸ் பார்க்,
குன்னூர்,
நீலகிரி மாவட்டம்
                              
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
விஜயநகரம்,
ஊட்டி,                    
நீலகிரி (மாவட்டம்) - 643001
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தும்மணட்டி,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001

அரசு தாவரவியல் பூங்கா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) - 643001


   
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
நஞ்சநாடு (கிராமம்),
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தேவாலா,
நடுக்கனி தபால்,
கடலூர்-643211,
நீலகிரி (மாவட்டம்) 
அரசு தோட்டக்கலைப் பண்ணை,
தொட்டபெட்டா,
ஊட்டி,
நீலகிரி (மாவட்டம்) -643001


Source : http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_extension%20services_state%20horticulture%20farms_ta.html